ஆசிரியர் குறிப்பு : தமிழின் இலக்கண நூலாகிய நன்னூலை எழுதியவர் பவணந்தி முனிவர். இவர் சமண சமயத்தைச்சார்ந்தவர் என்று அறியப்படுகிறது. பழங்காலத்திய தென்னாட்டுச்சமணர்களின் பெயர்கள் நந்தி என்ற சொல்லுடன் இணைந்தேயிருக்கும். பவணந்தி எழுதிய நன்னூல், தொல்காப்பியத்தை அடிப்படையாகக்கொண்டது. எழுத்தின் பிறப்பு : தமிழ் எழுத்துக்கள் உச்சரிக் கப்படும்போது, அவை நம் உடலின் எந்த பாகத்திலிருந்து உற்பத்தியாகின்றன என்பதை இவ்வாறு விளக்குகிறார். "அவ்வழி, ஆவி இடைமை இடமிட றாகும் மேவு மென்மைமூக் குறம்பெறும் வன்மை" பொருள் : உயிரெழுத்துக்களும் ய,ர,ல,வ,ழ,ள எனும் இடையின எழுத்துக்களும் கழுத்தில் (தொண்டை)தோன்றும். ங,ஞ,ண,ந,ம,ன எனும் மெல்லின எழுத்துக்கள் மூக்கில் தோன்றும். க,ச,ட,த,ப,ற எனும் வல்லின எழுத்துக்கள் நெஞ்சிலிருந்து பிறக்கும். ஆயுத எழுத்து தலையில் பிறப்பெடுக்கும். ...