முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

கணிதப்புதிர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாணவர்களுக்கு கணிதம்

தமிழ் நாட்டுப் பள்ளி மாணவர்களுக்கு கணிதம் கற்றுத்தரும் எண்ணிலடங்கா சேனல்கள் ( You Tube Channels) யூ ட்யூபில் காணக்கிடைக்கின்றன. அவற்றில் ஒன்று, Fun Maths .

காவலர் தேர்வு

சில நாட்களுக்கு முன் தினத்தந்தி நாளிதழில், காவலர் தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் வெளியாகியிருந்தன. அதில், கீழ்க்கண்ட வினா ஒன்று இடம் பெற்றிருந்தது. கேள்வி : ஒரு தேர்வில், வினாத்தாளில் 90 கேள்விகள் இடம் பெற்றுள்ளன. அனைத்து கேள்விகளுக்கும் கட்டாயம் பதிலளிக்கவேண்டும். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 2 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 3 மதிப்பெண்கள் கழிக்கப்படும். தேர்வை எழுதிய ஒரு மாணவன், 15 மதிப்பெண்கள் பெறுகிறான் எனில், அந்த மாணவன் எத்தனை கேள்விகளுக்கு சரியான விடையளித்திருப்பான்? இந்தக்கேள்விக்கு விடையாக 4 வாய்ப்புகள் (options) வழங்கப்பட்டிருந்தன. அந்த வாய்ப்புகளைக் கொண்டு சிற்சில மனக்கணக்குகளோடு, விடையை யூகித்து எழுதமுடியலாம். வாய்ப்புகள் ஏதுமின்றி, எங்கள் வீட்டின் உரிமையாளர், திரு. ஸ்ரீநிவாசன் எவ்வாறு விடையைக் கண்டுபிடித்தார்? முதலில், சரியான விடைகள்= 60 என்றால், தவறானவை = 30                             ...

பூக்கள் - வண்டுகள்

ஒரு தோட்டத்தில் சில பூக்கள் பூத்திருந்தன. அங்கே வந்த வண்டுகள், அந்தப் பூக்களில் உட்கார்ந்தன. ஒரு வண்டு மட்டும், அமர்வதற்கு ஒரு பூ இல்லாமல் தவித்தது. எனவே, வண்டுகள் எல்லாம் சேர்ந்து ஒரு யோசனை செய்தன. ஒவ்வொரு பூவிலும் இரண்டு இரண்டு பேராக உட்காரலாம் என்று முடிவு செய்து, அவ்வாறே செய்தன. முடிவில் ஒரு பூ மட்டும், தன்மேல் அமர்வதற்கு வண்டு ஏதும் இல்லாமல் தனியே புலம்பிக்கொண்டிருந்தது. அப்படியென்றால், அந்தத் தோட்டத்தில் எத்தனை பூக்கள் பூத்திருந்தன? அந்தத் தோட்டத்தி ற்கு எத்தனை வண்டுகள் வந் திருந்தன ? இந்தக் கணக்கை ‘அல்ஜீப்ரா’ வின் (Algebra) உதவியோடு அணுக முயற்சிப்போம். வண்டுகள் தனித்தனியே உட்காரும்போது : வண்டுகள் எண்ணிக்கை x என்க. பூக்கள் எண்ணிக்கை y என்க. பூக்களின் எண்ணிக்கையை விட, வண்டுகளின் எண்ணிக்கை 1(ஒன்று) அதிகம். எனவே, X – Y =1    ----------1 ஜோடிகளாக உட்காரும்போது : ஜோடிகளின் எண்ணிக்கை X/2 என்க பூக்கள் எண்ணிக்கை Y என்க. ஜோடிகளின் எண்ணிக்கையை விட , பூக்களின் எண்ணிக்கை 1( ஒன்று) அதிகம். எனவே , X/2 – Y = -1 ---------2 X   – Y = ...

Disc change

தட்டு விளையா ட்டு :                      Place for Help Place : B                              மேலே Place A என்ற இடத்தில் மூன்று தட்டுக்கள் உள்ளன. இவற்றை place B க்கு முழுவதுமாக எடுத்துச்செல்லவேண்டும். கீழே உள்ள விதிமுறைகளையும் மனதில் கொள்ளவேண்டும். விதிமுறைகள் : 1.ஒவ்வொரு தட்டாக மட்டுமே எடுக்கவேண்டும். 2.Place for Help –இலும் தட்டுக்களை வைக்கலாம், எடுக்கலாம். (ஒவ்வொரு தட்டாக மட்டுமே) 3.எக்காரணத்தைக்கொண்டும், சிறிய தட்டின் மேல் பெரிய தட்டை வைக்கக்கூடாது. 4.ஒரு தட்டை, ஒருமுறை தொட்டால், ஒரு step என்று கணக்கிடப்படும். 5.ஏழு steps களில் ஆட்டத்தை முடிக்கவேண்டும். தயாராகிவிட்டீர்களா? வெற்றி உங்களுக்கே! ஐயங்களிருந்தால், தயக்கமின்றி தொடர்புகொள்ளுங்கள். அதிக எண்ணிக்கையிலான தட்டுக்களை வைத்து விளையாடிப்பாருங்கள். ...