நம்மிருவருக்கும்
புதிதல்ல
நெருப்பு.
ஒருவரையொருவர்
வார்த்தைகளால்
சுட்டுக்கொண்டோம்.
பார்வைகளால்
எரித்துக்கொண்டோம்.
வெம்மை தாங்காமல்
விலகிச்சென்றோம்.
பாதையில்
சந்திக்க நேர்ந்தால்
பழைய நினைவுகள்
சுடும்.
* * *
காதல் யாகம்
செய்ததற்காக,
சாதி ...
நம் வீட்டுக்கூரையில்
தீ வைத்தது.
உன்னைக்காப்பற்ற
நான் நினைத்தேன்.
எனவே...
காதலைத்தொடர்ந்தேன்.
என்னைக்காப்பற்ற
நீ நினைத்தாய்.
எனவே...உன்
காதலை மறைத்தாய்.
அதன் பின்,
ஒருவரையொருவர்
வார்த்தைகளால்
சுட்டுக்கொண்டோம்.
பார்வைகளால்
எரித்துக்கொண்டோம்.
வெம்மை தாங்காமல்
விலகிச்சென்றோம்.
ஒருவழியாய்...
நாமிருவரும் சேர்ந்து...
காதலுக்குத்தீ வைத்தோம்.
அன்புடன்,
தே.சிவகுமார்.
கருத்துகள்
கருத்துரையிடுக