" சீருடை அணிந்த காவலர்களின் மேல் கை வைப்பது என்பது வன்முறையின் உச்சம் " இதுதான் தலைவரின் சமீபத்திய உளறல்.
நமக்கு எழும் முதல் கேள்வி இதுதான் : சீருடை அணியாத காவலர்கள் மேல் கை வைத்தால் பரவாயில்லையா?
இந்தக் கேள்வி ஏதோ வீம்புக்காகக் கேட்கப்படுவதாகத் தோன்றலாம். இந்த நாட்டின் உண்மையான காவலர்கள், சீருடை எதுவும் அணிவதில்லை. அவர்களுக்கு, உழைப்பாளிகள், பாட்டாளிகள்,
விவசாயக்கூலிகள் என்று பல பெயர்கள் உள்ளன. அவர்களிடம் உறிஞ்சப்பட்ட இரத்தம்தான், சீருடை மனிதர்களுக்கும், அவர்களின் எஜமானர்களுக்கும் சம்பளம் என்ற பெயரிலும்,
மது எதிர்ப்பு போராட்டம் |
சரி. வன்முறையின் உச்சம் என்பது எது?
சகல அதிகாரமும் ஆயுத பலமும் கொண்ட ஒரு கூட்டம், அப்பாவிகளின் மேல் நடத்தும் கொலை வெறித்தாக்குதலா? அல்லது
எதிர் தாக்குதலா? எது வன்முறையின் உச்சம்?
செம்மரம் வெட்ட வந்தார்கள் என்று சொல்லி, கூலித்தொழிலாளர்களை கொன்று சாய்த்தார்களே...அதுதான் வன்முறையின் உச்சம்.
டாஸ்மாக் கடை வேண்டாமென்று போராடிய பெண் மீது நடுரோட்டில், பட்டப்பகலில், பேய்வெறித் தாக்குதல் நடத்தினானே...அவனுக்கும் அஜ்மல் கஸாப்புக்கும் என்ன வித்தியாசம்?
கல்லூரி மாணவி மீது குண்டர் சட்டம் ஏவினார்களே...இவர்கள் இடிஅமீனை விட நல்லவர்களா?
தனக்கோ தன் இனத்துக்கோ ஆபத்து வரும்போது, எதிர்த்துத் தாக்குவதென்பது உயிர்களின் இயற்கை நியதி. சில கால் நக்கி மனிதர்களைத் தவிர, இது எல்லா உயிர்களுக்கும் பொருந்தும்.
கடைசியாக, நாட்டுக்கே ஆபத்து என்று ஒப்பாரி வைக்கிறார். அய்யா..கன்னடத்து நாயகரே...உண்மைதான்...ஆபத்துதான்...ஆனால், நாட்டுக்கு அல்ல. உலகத்துக்கே ஆபத்து.
தேசப்பற்றின் பெயரால், மக்களின் பெயரால், மதத்தின் பெயரால், சீருடைகளின் பெயரால், வளர்ச்சியின் பெயரால், விளையாட்டின் பெயரால் மக்களை போதையில் ஆழ்த்தி, மக்கள் இரத்தத்தில் வயிறு வளர்க்கும் பண
முதலைகளின் உலகத்துக்கே ஆபத்து. உங்கள் எஜமானர்களிடம் சொல்லி கடுமையான சட்டம் போடச் சொல்லுங்கள். எப்போதாவது உங்களுக்கு உதவலாம்.
கடைசியாக ஒன்று....
புரட்சியின் தொடக்கம், அதிகாரத்தின் கண்களுக்கு வன்முறையின் உச்சமாகத்தான் தெரியும்.
கருத்துகள்
கருத்துரையிடுக