கமல் தன்னுடைய கட்சியின் தொடக்க நிகழ்ச்சியில், கட்சியின் கொள்கைகளை அறிவிப்பார் என்று காத்திருந்த எல்லோருமே ஏமாந்துபோனார்கள் என்றுதான் சொல்லவேண்டும். தான், ஒரு இடதுசாரியா? வலதுசாரியா? என்று சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. நான், இரண்டுக்கும் 'மய்ய' த்தில் இருக்கிறேன் என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? நீங்க நல்லவரா? இல்ல கெட்டவரா? என்று கேட்டால், தெரியலையேப்பா என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம். ' இரண்டுக்கும் நடுவானவன் ' என்று சொல்லும்போது எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? இடதுசாரிகளின் கொள்கைகள் எவை? வலதுசாரிகள் யார்? இவர்களில் யார் நல்லவர்கள்? இந்தக் கேள்விகளுக்கான விடைகள், இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஃபிரான்சில் தொடங்குகின்றன. 1789 முதல் 1799 ஆம் ஆண்டுகளில் நடந்த ஃபிரெஞ்சுப் புரட்சியின்போது, அந்நாட்டின் அரசவையில் (இந்தியாவின் பாராளுமன்றம் போன்றது), முடியாட்சியின் பெயரிலான முதலாளித்துவ சர்வாதிகாரத்தை ஆதரித்தவர்கள் வலதுபக்க இருக்கைகளிலும், குடியரசின் மக்கள் அதிகாரத்தை ஆதரித்தவர்கள், இடது பக்க இருக்கைகளிலும் அமர்ந்திருந்தனர். இடது வலது என்ற சொல்லாடல் இ...
பல் சுவை தமிழ் இணையம். இலக்கியம், இலக்கணம், கவிதைகள், சிந்தனைகள், கணித விளையாட்டுகள் அனைத்தும் காணக்கிடைக்கும்.