முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இதயம்

          உறங்கும் போது மனித மூளையில் சில பகுதிகள் மட்டும் செயல்படாது. காரணம் நாம் ஓய்வில் இருக்கிறோம். ஆனால் நம் இறுதி மூச்சு வரை செயல்படும் ஒரே உறுப்பு இதயம். மனித இதயம் லப்-டப் லப்-டப் என நிமிடத்திற்கு 72முறை துடிக்கிறது.

          வில்லியம் ஹார்வே (William Harvey), 1578-1657, என்னும் ஓர் ஆங்கில மருத்துவரால் தான் முதன் முதலில் குருதி ஓட்டம், குருதியின் பண்புகள் மற்றும் இதயத்தின் செயல்பாடுகள் போன்றவை கண்டறியப்பட்டது.

இதயம் ஓர் உட்குழிவுடைய, நார் மற்றும் தசையிலான உறுப்பு. இது ஒரு கூம்பை கவுத்துவைத்தாற்போல இருக்கும். இதயம், பாதுகாப்பான ஈரடுக்கு கொண்ட பெரிகார்டியத்தால் (pericardium) ஆனதாகும். இந்த இரண்டடுக்குகளுள் பெரிகார்டியல் ஃப்ளூயிட் (pericardial fluid) இருக்கும். இதயத்தின் தசையை கார்டியாக் தசை (cardiac muscle) என்பர். இதயம் நான்கு அறைகள் கொண்ட உறுப்பு. வலது பாதி, குருதியை வாங்கியும் மற்றும் உயிர்வளியில்லா (deoxygenated) குருதியை வெளியேயும் தள்ளும். இடது பாதி, குருதியை வாங்கியும் மற்றும் உயிர்வளி (oxygenated) உள்ள குருதியை வெளியேயும் தள்ளும்.


ஆரிக்கிள்கள் (Auricles):

          ஆரிக்கிள்கள், இதயத்தின் மெல்லிய சுவர் கொண்ட, மேல் அறைகளைக் கொண்ட பகுதியாகும். இது இடது வலது என்று, இன்டர்-ஆரிகிலார் செப்டத்தால் (inter-auricular septum) பகுக்கப்பட்டுள்ளது. ஆரிக்கிள்கள், குருதியை வாங்கும் அறைகளாகும். வலது ஆரிகில்ஸின் மேற்பகுதியில் சுபீரியர் வெனகாவா (superior venacava) மற்றும் கீழே இன்ஃபீரியர் வெனகாவாவும் (inferior venacava) உள்ளது. சுபீரியர் வெனகாவா மற்றும் இன்ஃபீரியர் வெனகாவா, உடலின் பல உறுப்புகளிலிருந்து உயிர்வளியில்லா குருதியை வாங்கும். பிறகு இடதுஆரிகில்ஸில் நான்கு பல்மனரி வெயிஸும் (pulmonary veins), இரண்டு நுரையீரலில் இருந்து உயிர்வளி உள்ள குருதியை வாங்கிக்கொண்டுவரும்.

வெண்ட்ரிக்கிள்கள் (Ventricles):

          வெண்ட்ரிக்கிள்கள், இதயத்தின் திண்மை (thick) சுவர் கொண்ட கீழ் அறைகளைக் கொண்ட பகுதியாகும். இது இடது வலது என்று இன்டர்-வென்ட்ரிகிலார் செப்டத்தால் (inter-ventricular septum) பகுக்கப்பட்டுள்ளது. வெண்ட்ரிக்கிள்கள், இதயத்தை விட்டு குருதியை வெளியே தள்ளும் அறைகளாகும். வலது வெண்ட்ரிக்கிள்கள், உயிர்வளியில்லா குருதியை பல்மனரி ஆர்ட்டரிக்கு (pulmonary artery) அனுப்பும். இடது வெண்ட்ரிக்கிள்கள், உடம்பின் பல பகுதிகளுக்கு உயிர்வளி உள்ள குருதியை ஆர்ட்டா (aorta) வழியாக அனுப்புவதே இதன் வேலையாகும்.




இதயத்துணுக்குகள் (Apertures of heart):

          வலது ஆரிகில்ஸுக்கும் வலது வென்ட்ரிகில்ஸுக்கும் இடையில் வலது ஆரிகிலோ-வென்ட்ரிகிலார் துணுக்கு (right auriculo-ventricular aperture) உள்ளது. இடது ஆரிகில்ஸுக்கும் இடது வென்ட்ரிகில்ஸுக்கும் இடையில் இடது ஆரிகிலோ-வென்ட்ரிகிலார் துணுக்கு (left auriculo-ventricular aperture) உள்ளது.

இதயத்தின் தடுப்பான்கள் (valves):

          வலது ஆரிகிலிலிருந்து வலது வென்ட்ரிகில்ஸுக்கு குருதி ஓட்டத்தைக் கட்டுப்படுத்த வலது ஆரிகிலோ-வென்ட்ரிகிலார் தடுப்பானில் (right auriculo-ventricular aperture) ட்ரைகஸ்பிட் தடுப்பானின் (tricuspid valve)  மூன்று மடிப்புகளும் (flaps) செயல்படும். இதனால் குருதி பின்நோக்கி செல்வதைத் தடுக்கப்படும்.

          இடது ஆரிகில்ஸிலிருந்து இடது வென்ட்ரிகில்ஸுக்கு குருதி ஓட்டத்தைக் கட்டுப்படுத்த இடது ஆரிகிலோ-வென்ட்ரிகிலார் தடுப்பானில் (left auriculo-ventricular aperture) பைகஸ்பிட் தடுப்பான் (bicuspid valve) [அல்லது மிட்ரல் தடுப்பான் (mitral valve)] இன் இரு மடிப்புகளும் செயல்படும். இதனால் குருதி பின்நோக்கி செல்வதைத் தடுக்கப்படும்.

          Pulmonary arteryஇன் அடிப்பகுதியில் அரைநிலவு (semi-lunar valve) தடுப்பான் உள்ளது. இது வலது வென்ட்ரிகிலில் இருந்து பல்மனரி ஆர்ட்டரிக்குக்கு குருதி ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும்.

          Aortaவின் அடிப்பகுதியில் ஆர்ட்டிக் தடுப்பான் (aortic valave) உள்ளது. இது இடது வென்ட்ரிகிலில் இருந்து ஆர்ட்டாவிற்கு குருதி ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும்.

இதயத்தின் செயற்பாடுகள்:

          இதய தசைகள் சுருங்கி தளர்வதாளேயே இதயம் செயல்படுகிறது. இதை சுருங்கிய நிலை (contraction phase), தளரிய நிலை (relaxation phase) என்பர்.
சுருங்கிய நிலையை சிஸ்டோல்(systole) என்றும் தளரிய நிலையை டையாஸ்டோல்(diastole) என்றும் அழைப்பர்.
          ஆரிக்கிள்கள் குருதியால் நிறையும்போது, ஆரிக்கிள்கள் தளரிய நிலையை(auricular diastole) அடைகிறது. அந்த நேரமே, வெண்ட்ரிக்கிள்கள், aortaவிற்கும், pulmonary arteryக்கும் குருதி பாய்வதை ventricular systole என்றழைப்பர்.
          ஆரிக்கிள்கள் சுருங்கும்போது(auricular systole) குருதி வென்ட்ரிகில்ஸிற்கு பைகஸ்பிட் வால்வு வழியாகவும் ட்ரைகஸ்பிட் வால்வு வழியாகவும் தள்ளப்படுவதால் இதை ventricular diastole என்றழைப்பர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உவமையணி

உவமை அணிக்கான இலக்கணம் : ஒரு பொருளை அல்லது செயலை, எடுத்துக்காட்டோடு சிறப்பாகச் சொல்வதே உவமையணி ஆகும். மேலும், உவமை அணியில் "போல" என்னும் உவம உருபு வெளிப்படையாக அமைந்திருக்கும். உவமையணி பற்றிய விளக்கத்தை, என் மகனின் பத்தாம் வகுப்பு தமிழ்க்குறிப்பேட்டில் தற்செயலாகக் கண்டேன். இனி, குறிப்பேட்டில் உள்ளபடி. கீழ்க்கண்ட குறளில் பயின்றுவரும் அணி எது? கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து அணிச்சுட்டல் :     இதில் உவமையணி பயின்று  வந்துள்ளது. அணியிலக்கணம் :     ஒரு பொருளை அதே தன்மையுடைய மற்றொரு பொருளோடு ஒப்பிட்டு கூறுவது உவமையணி எனப்படும்.    இதில் உவமை, உவமேயம், உவம உருபு வெளிப்படையாய் வரும். குறள் விளக்கம் :     வாய்ப்பற்ற காலத்தில் கொக்கைப்போல் அமைதியாக காத்திருத்தல் வேண்டும். உரிய காலம் வாய்த்ததும் கொக்கைப்போல் விரைந்து செயலைச் செய்து முடித்தல் வேண்டும். பொருத்தம் உவமானம் :         "கொக்கொக்க கூம்பும் பருவத்து"     வாய்ப்பற்ற காலத்தில் கொ...

வினைமுற்று விகுதி

    ஒருநாள் கலைஞர் தொலைக்காட்சியில், பேராசிரியர் சுப.வீ. அவர்கள், தான் படித்த ஒரு புத்தகத்தின் மீதான தனது மதிப்புரையை வழங்கிக்கொண்டிருந்தார். புத்தகத்தின் ஆசிரியர், தமிழில்  சில தேவையற்ற இலக்கண விதிகள் உள்ளதாகவும், மலையாளப் பேச்சு வழக்கு போல அவை மாற்றப்படவேண்டும் என்றும் எழுதியிருந்ததை பேராசிரியர் அவர்களும் ஏற்றுக்கொள்வது போல பேசியது, எனக்கு சற்றே அதிர்ச்சி ஏற்படுத்துவதாக இருந்தது. குறிப்பாக வினைமுற்று விகுதிகளைப் பற்றித்தான் பேசினார்.

அகரம்

" அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு " ஒரு திருக்குறள் சொல்லேன் என்று யாராவது சொன்னால், நமக்கு உடனே நினைவுக்கு வருவது இந்த குறள் தான். இந்த குறளைப் பற்றி நமக்கு என்னென்ன வெல்லாம் தெரியும் என்று கொஞ்சம் பார்க்கலாமா?